1 நவம்பர், 2012

சாரல்

பெரு வெயிலென்றால்
முதுகுச் சட்டை நனைந்தவாறு கூட
பயணப்படலாம்

பெரு மழையென்றால்
முழுவதும் நனைந்தவாறு கூட
முன்னேறிகொண்டிருக்கலாம்

எப்பொழுதாவது பொழியும்
இந்தச் சாரல்தான்
இங்கிருந்து நம்மை
நகர்ந்து விடாதபடிக்குச் செய்துகொண்டிருக்கிறது.

-- கார்த்திக்

கருத்துகள் இல்லை: