19 ஆகஸ்ட், 2013

கவிதைகள்

கவிதைகள் எதுவும் எழுதாத நாட்களில்
குழந்தைகள் பூக்களை பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறார்கள்...

கவிதைகள் எதுவும் எழுதாத நாட்களில்
குழந்தைகள் சுவற்றில் கிறுக்குகிறார்கள்....

கவிதைகள் எதுவும் எழுதாத நாட்களில்
குழந்தைகள்
கவிஞர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

 

கருத்துகள் இல்லை: