20 ஆகஸ்ட், 2013

குரங்குகள் பற்றிய சில குறிப்புகள்..

குரங்குகளுக்கென்று
நிலையான
இருப்பிடமோ இருதயமோ
கிடையாது

குரங்குகளின் வீடுகளில்
அலைபேசியும்
தொலைக்காட்சியும் உண்டு

குரங்குகள்
மற்றவைகளுடன் தங்களை
ஒப்பீடு செய்துகொள்கின்றன

குரங்குகளின் காலம்
பணம் சேர்ப்பதிலும்
பகடி செய்வதிலும்
கழிகின்றது

குரங்குகளின்
வன்மம்
துரோகமும் துயரமும்
கலந்ததாயிருக்கின்றது

குரங்குகளின்
உதவிகளுக்குள்
ஏளனமும் எதிர்பார்ப்பும்
கொட்டிக்கிடக்கின்றன

பின் குறிப்பு : -

குரங்குகளைப் பற்றி
டார்வினுக்கு
ஒன்றுமே தெரியாது..

டார்வின் பற்றி
குரங்குகளுக்கு
நன்றாகவே தெரியும்..

குரங்குகள்
குரங்குகளே
அல்ல.


--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: