28 ஆகஸ்ட், 2013

மாயக் கிருஷ்ணன்

இராதா கிருஷ்ணன் (எ) பால கிருஷ்ணன்
சென்னையில் இருக்கிறானென்றும்
எப்பொழுதும் போல் இப்பொழுதும்
தூங்கிக்கொண்டே இருக்கிறானென்றும்
நண்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்

கோலமிடும் மாவை ஓரத்தில் வைத்துக் கொண்டே
'அவன்' வந்து போனதாக
வருடத்திற்கொரு முறை
என் வண்ணமயில் தெரிவிக்கிறாள்

என் அலைபேசி அழைப்புகளுக்கு
இதுவரை அவன்
பதிலளித்ததில்லை

இருக்குமிடத்தை
ஒரு நாளும் அவன்
தெரியப்படுத்திக் கொண்டதுமில்லை

அவன் இருப்பைப் பற்றிய
செய்திகள்
ஊர்ஜிதமானவையுமல்ல

இராதா கிருஷ்ணன் (எ) பால கிருஷ்ணன்
ஒரு
மாயக் கிருஷ்ணன்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: