30 ஆகஸ்ட், 2013

மௌனம்

நமக்கு இடையேயான
மௌனத்தினூடே
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
பழுத்த இலைகள்

சருகுகளாகி
சப்தமிடுவதற்குள்
கலைத்து விடுவோம்
மௌனத்தை..

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: