11 நவம்பர், 2009

சங்கீதம்

சங்கீதம் பற்றி
எதுவும் தெரியாதென்ற பிறகு
ஒட்டடை படிந்த
வீட்டின் முற்றத்தில்
பல்லாங்குழிகளைப்
பார்த்தவாறே
ஒதுங்கிக் கொள்ளலாம்.

தானே
வேர் பிடித்து
துளிர்விட்ட
கான்க்ரீட் செடிகளுக்கு
ஆரோகணம்
அவரோகணம் பற்றிய
கவலையில்லை

பெருந்தாகம் தீர்க்கும்
சங்கீதம் மட்டுமே
முக்கியம்
அவைகளுக்கு..


--கார்த்திக் முருகன்


கருத்துகள் இல்லை: