26 அக்டோபர், 2009

தடங்கள்

சற்று முன் நீங்கள்
நடந்து சென்ற
அதே கரையைத்தான்
புதையப் புதையக்
கடந்து கொண்டிருக்கிறேன்
மேலேழுந்தவாறும்
உள்ளடங்கியும்
விரவிக் கிடக்கும்
தடங்களிலிருந்து
எவ்விதத்திலும்
மாறுபட்டதில்லை எனது.
இரண்டு கரைக்கும்
சேர்த்து
ஒரே நதி.

--கார்த்திக் முருகன்

6 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்குங்க கார்த்தி

Karthik சொன்னது…

மிக்க நன்றி! நேசமித்ரன்.

பா.ராஜாராம் சொன்னது…

அது சும்மா உலு உலுவாயிககு....ரவுடின்னு வேற பயமுறுத்துறீங்க..
மதுரை பக்கமா நீங்க..நான் சவுதியில் ஒரு கருப்பாயி ஊரணி இருக்கு அதை சொன்னேன்!..:-))
நான் சிவகங்கை கார்த்தி!

கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு கார்த்தி!

Karthik Murugan சொன்னது…

:) அப்ப ரொம்பப் பக்கத்துல வந்துட்டோம். ரொம்ப நன்றிணே. மீண்டும் சந்திப்போம்.

ny சொன்னது…

this one is a real beauty!!

Karthik Murugan சொன்னது…

Thanks, Kartin!