5 அக்டோபர், 2009

இப்போது...

கடவுளாய்க் காட்சி தந்த
பால்புட்டி இப்போது
காட்சிப் பொருளாய்

எவரெஸ்ட்டாய்
உயரம் காட்டிய
நாற்காலிகள் இப்போது
இடுப்புக்குக் கீழே

குழந்தை முகங் காட்டிய
கண்ணாடி இப்போது
உருக்குலைந்த முகங் காட்டும்
முயற்சியில்

சிரமத்தோடு மனனம் செய்த
அகரங்கள் இப்போது
சிந்திப் பெருகும் கவிதைகளாய்..

--கார்த்திக் முருகன்


4 கருத்துகள்:

Henry சொன்னது…

simply superb ! Current goal/ambition always looks like Everest while we acheived many similar(s) in past.

Karthik Murugan சொன்னது…

:). Thank you, Sir.

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

அழகு..
//சிரமத்தோடு மனனம் செய்த
அகரங்கள் இப்போது
சிந்திப் பெருகும் கவிதைகளாய்..
//

மிகவும் பிடித்தது!

Karthik Murugan சொன்னது…

மிக்க நன்றி, சுபஸ்ரீ இராகவன்.