24 செப்டம்பர், 2009

இருக்கை


எழுதுகோலில்
மசியில்லை
கொட்டிக் கிடக்கும்
கவிதைகள்

விசாரிக்க
ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி
                               
விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி
                                   
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
உங்கள் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..
--கார்த்திக் முருகன்

1 கருத்து:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நல்லா இருக்கு கார்த்தி

-ப்ரியமுடன்
சேரல்