புகைப்படங்கள் என்னைப்
புரட்டத் தொடங்கியபொழுது
அடர்ந்த வனத்திற்குள்
ச்சில்லென்ற ஓடை நீரில்
கால் நனைத்தபடி
நடக்கத் தொடங்கியிருந்தேன்
அகவல்களும் உறுமல்களும்
சல சலக்க
ஒரு சில தவளைக் கற்களும்
மண்டையோடுகளும் தட்டுப் பட்டு
மலை உச்சியில் வழிந்தோட
ஆரம்பித்த கணத்தில்
கை நிறைய மயில் தோகைகளோடும்
நகக் கீறல்களோடும்
கரை ஏறியிருந்தேன்.
--கார்த்திக் முருகன்.
7 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக