இன்ன பிற
கதைகளில் கேட்டவாறில்லை
பிசாசுகளின் உருவங்கள்
சவரம் செய்த முகத்துடன்
வசீகரப் புன்னகையுடனே
வலம் வந்தன
எவரும் கவனிக்காத பொழுதொன்றில்
தத்தம் இருப்பிடத்திலிருந்து
நகரத் துவங்கிய
அவைகளின் முன்னெடுப்புகள்
என் இருக்கையை நோக்கியது
என்று உணரத் துவங்கியபின்
ஓட்டமும் நடையுமாய்
அதன் வீதிகளைக்
கடக்கத் துவங்கினேன்
அவை
தங்களுக்குள்
கை குலுக்கிக்
கூடிச் சிரித்துக் கொண்டன
அவைகளின் உதட்டு
முத்ததில்
இனிப்பும் புளிப்பும்
கலந்து பரவுவதாக
குட்டிப் பிசாசொன்று
என் காதருகே
கூவிச் சென்றபோது
என்
பற்கள் நீண்டு
கடைவாயோரம்
குருதி வழிந்து
கொண்டிருப்பதை
உணர முடிந்தது.
--கார்த்திக் முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

3 கருத்துகள்:
dai.....nee kavignan da
உனக்கு....."கவிதை செம்மல்" என்ற பட்டம் அளிக்கிறேன்
அதுக்கு பதிலா எதாவது 'கம்மல்' வாங்கி அனுப்பு. வித்தாவது பொழச்சுக்குறேன்.
கருத்துரையிடுக