2 செப்டம்பர், 2009

கைமணம்

பருக்கைகளுக்கிடையேயான
தேடலில்
அகப்பட்ட கற்துண்டுகள்.

இருக்கிறேனென்ற சப்தத்துடன்
வெப்பக் காற்றை கீழ்த்தள்ளும்
மின்விசிறி.

உனக்கிது போதுமென்ற தொனியில்
ஊற்றப்பட்ட
மாதிரிச் சாம்பார்.

விக்கலின் இடையே
பிடித்த அபிநயத்தால்
கிடைத்த
குவளைத் தன்ணீர்.

எதுவுமே நிரப்புவதற்கு
தயாராயில்லை
அம்மாவின் கைமணத்தை.


-கார்த்திக் முருகன்.

1 கருத்து:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

ஹ்ம்ம்ம்ம்.....

நடக்கிறதுதான் கார்த்திக்....

-ப்ரியமுடன்
சேரல்