வாக்குறுதிகளின்
தூக்கம் கலையாமல்
தேர்ந்த
பாலே அசைவுகளோடு
தாண்டியோ
தாவிக் குதித்தோ
கடந்து செல்லலாம்
கேள்விக்குறிகளாகவும்
எதிர்பார்ப்புகளாகவும்
உருமாறும் முகங்களுக்கு
வலுவிழந்த புன்னகையை
பரிசளித்துச் செல்லலாம்
அசம்பாவிதங்கள் எதுவும்
நிகழ்ந்து விடப் போவதில்லை
வாக்குறுதிகள்
இறைந்து கிடக்கும்
இதே விபச்சாரத் தெருவில்தான்
பிராயசித்தங்களும்
குவிந்து கிடக்கின்றன
--கார்த்திக் முருகன்
11 நவம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக