18 டிசம்பர், 2009

ஸ்டெர்லிங் ரோடு

கூப்பிடு தூரத்தில்தான்
கதீட்ரல் பேராலயம்
எல்லையம்மனின் எல்லைக்குட்பட்ட
பகுதியும் இதுவே!

சடாரென்று நிகழ்ந்த
விபத்தைப் பற்றி
எவ்வித தகவலும்
கிடைக்கப்பெறவில்லை
எல்லாம் வல்ல கடவுள்களிடமிருந்து.

வலியில் துவளும்
சீவனை மடியிலேந்தி
மருத்துவமனையில்
சேர்ப்பித்த போது
திசைகள் சிதற
பேரு(ர)ருவமாய் அருள் பாலித்து
நின்றது, அன்பு.

--கார்த்திக் முருகன்

7 கருத்துகள்:

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

கவிதை படித்து ஒரு நிமிடம் மெளனமானேன். அடுத்த நொடி
அன்பே கடவுளாய் அருள் பாலித்தது கண்டு மகிழ்ந்தேன் .

அருமையா சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

Karthik Murugan சொன்னது…

மிக்க நன்றி சுபஸ்ரீ!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நன்று!

-ப்ரியமுடன்
சேரல்

Henry சொன்னது…

Good one Karthik !
Things work together for good to them that love God, to them who are the called according to his purpose. Hope this happened for good that one should understand "A man who has friends must shew himself friendly: and there are friends who stick(love) closer than a brother".

Karthik Murugan சொன்னது…

Thank you very much for your comments, Sir!

Karthik

சுந்தரா சொன்னது…

சிறப்பான கவிதை!

அன்பே கடவுளாக,அழகாகச் சொல்லியிருக்கீங்க.

பாராட்டுக்கள் கார்த்திக் முருகன்!

Karthik Murugan சொன்னது…

:. Thanks, Sundara!