24 டிசம்பர், 2009

வெயிலு

வெயிலு இன்னிக்கு பலமா அடிக்குதுல்ல?
விடாத மாப்ள.., திருப்பி அடி

லந்துக்குச் சொன்னாலும்
ரகசியம் என்னன்னா
ரத்தக் களறியாத்தேன் கெடக்கு
அடி மனசு ரெண்டு பேரு கிட்டயும்

எல்லாத்தயும்
ஆரத் தழுவி அரவணச்சுத்தான்
போகுது வெயிலு.

--கார்த்திக் முருகன்


1 கருத்து:

seba சொன்னது…

வெயில மட்டுந்தான் போர்த்திகிட்டு திருஞ்சோம் அப்போ
வெயில் படாம போர்த்திகிட்டு திரியிறோம் இப்போ