காதறுந்த
மஞ்ஞள் பை தவிர்த்து
கதவு தட்டி நாசூக்காய்
நீட்டப்படும் பால் பாக்கெட்டுகள்
சட்னி சாம்பார் இட்லியுடன்
மரியாதை கலந்து
பறிமாறப்படும்
மெஸ் சாப்பாடு
சொந்தங்களின்
இடையறாத குறுஞ்செய்திகளினூடே
அலைபேசி வழி அம்மா கேட்பாள்
'பணம் வெச்சிருக்கியாடா செலவுக்கு?'
--கார்த்திக் முருகன்
24 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
நேர்த்தி!
கருத்துரையிடுக