உலுக்கியெடுக்கப்பட்ட
ஒரு மரத்தின் இலையை
ஓயாத அலைகள் கொண்ட
குளத்தில் எறிகிறது
வன் புயலொன்று
பச்சையம் நிறைந்த
மரத்தின் வலியை
ஒரு படகு போல
மெல்ல
அசைத்து அசைத்து
கரைக்குக் கடத்துகின்றன
அலைகள்
இரண்டு கால்களையும்
ஊன்றியபடி
மீன்களைத் தேடிக்
கொண்டிருக்கிறது
எதுவும் அறியாத
ஒரு கொக்கு.
--கார்த்திக் முருகன்
ஒரு மரத்தின் இலையை
ஓயாத அலைகள் கொண்ட
குளத்தில் எறிகிறது
வன் புயலொன்று
பச்சையம் நிறைந்த
மரத்தின் வலியை
ஒரு படகு போல
மெல்ல
அசைத்து அசைத்து
கரைக்குக் கடத்துகின்றன
அலைகள்
இரண்டு கால்களையும்
ஊன்றியபடி
மீன்களைத் தேடிக்
கொண்டிருக்கிறது
எதுவும் அறியாத
ஒரு கொக்கு.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக