1)
முதல் தளத்தில்
நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்
இரண்டாம் தளத்தில்
நீ வாசித்துக் கொண்டிருக்கிறாய்
கீழ்தளத்திலிருந்து
மேல்தளம் வரை
உயர்ந்து வளர்ந்து நிற்கின்றது
ஒரு ஊசியிலை மரம்.
2)
விளையாட்டின் போது
தவறி விழுகிறாய்
பரந்த இந்த மைதானத்தில்
நாட்கள் கடந்தும்
தளும்புகிறதுன்
தாடைத் தழும்பு.
3)
பெருங்காரியம் முடிந்த பிறகு
பெருகி வழிகின்றது வியர்வை
துடைக்க மனமின்றி
ஒளித்து வைக்கிறேன்
சற்று முன் களவாடிய
உன் கைக்குட்டையை..
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக