பூக்கள் சூழ்ந்த
மலைச் சாலை
ரோமங்கள் வருடும்
குளிர் காற்று
எதைப் போலவுமல்லாத
மூலிகை வாசம்
இவை
எதைப் பற்றிய
ப்ரக்ஞையுமற்று
திணறித் திணறி
மேலேறும்
ஆகப் பெரியதொரு
பொதியைச் சுமக்கும்
குதிரை.
--கார்த்திக் முருகன்
மலைச் சாலை
ரோமங்கள் வருடும்
குளிர் காற்று
எதைப் போலவுமல்லாத
மூலிகை வாசம்
இவை
எதைப் பற்றிய
ப்ரக்ஞையுமற்று
திணறித் திணறி
மேலேறும்
ஆகப் பெரியதொரு
பொதியைச் சுமக்கும்
குதிரை.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக