சற்றே
இளைத்த உடல்
தெற்றுப்பல் காட்டும்
அதே சிரிப்பு
படிய வாரிய
சிகை
சந்தேகமில்லை
எதிர்ச் சாலையில்
நின்றுகொண்டிருப்பது
நீதான்
உன் பச்சை விளக்கு ஒளிர
இரு மருங்கிலும்
சாலையை நோக்கியபடி
கடந்து கொண்டிருக்கிறாய்
நிறுத்தத்திலிருந்து
மீண்டும் முதல் 'கியரி'லிருந்து
புறப்படுகிறது இவ்வாகனம்
புகையைக் கக்கியபடி...
--கார்த்திக் முருகன்
இளைத்த உடல்
தெற்றுப்பல் காட்டும்
அதே சிரிப்பு
படிய வாரிய
சிகை
சந்தேகமில்லை
எதிர்ச் சாலையில்
நின்றுகொண்டிருப்பது
நீதான்
உன் பச்சை விளக்கு ஒளிர
இரு மருங்கிலும்
சாலையை நோக்கியபடி
கடந்து கொண்டிருக்கிறாய்
நிறுத்தத்திலிருந்து
மீண்டும் முதல் 'கியரி'லிருந்து
புறப்படுகிறது இவ்வாகனம்
புகையைக் கக்கியபடி...
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக