நெடிய
இந்தப் பயணத்தின்
முதல் நிறுத்தத்தில்
அதிகாலையை ரசித்தோம்
இரண்டாம் நிறுத்தத்தில்
தேநீர் குடித்தோம்
மூன்றாம் நிறுத்தத்தில்
குளிர்பானம் அருந்தினோம்
நான்காம் நிறுத்தத்தில்
சிறுநீர் கழித்தோம்
இறுதியில்
வீடு சேர்ந்தோம்.
நிறுத்தங்களற்றதொரு பயணம்
எப்போதும் வாய்த்ததில்லை.
தொடங்கவே தொடங்காத
முடியவே முடியாத
இன்னுமொரு பயணத்தின் நிறுத்தங்கள்
ஒளிந்திருக்கும் கானலுக்குள்.
--கார்த்திக் முருகன்
இந்தப் பயணத்தின்
முதல் நிறுத்தத்தில்
அதிகாலையை ரசித்தோம்
இரண்டாம் நிறுத்தத்தில்
தேநீர் குடித்தோம்
மூன்றாம் நிறுத்தத்தில்
குளிர்பானம் அருந்தினோம்
நான்காம் நிறுத்தத்தில்
சிறுநீர் கழித்தோம்
இறுதியில்
வீடு சேர்ந்தோம்.
நிறுத்தங்களற்றதொரு பயணம்
எப்போதும் வாய்த்ததில்லை.
தொடங்கவே தொடங்காத
முடியவே முடியாத
இன்னுமொரு பயணத்தின் நிறுத்தங்கள்
ஒளிந்திருக்கும் கானலுக்குள்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக