11 நவம்பர், 2013

செரித்தல்

நீண்ட நெடிய
இந்தப் பயணத்தில்
நாம் மீண்டும்
சந்திக்க நேரிடலாம்

என் உன் மீதான
பழைய
வருத்தங்களின் கிளைகள்
பற்றிப் படரலாம்

எதற்கும்
இருக்கட்டும்

மென்று
செரிக்க வசதியாய்

ஆளுக்கொரு
'பபிள்' கம்மை
வாயில் போட்டுக் கொள்வோம்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: