16 மார்ச், 2014

தீ

எவரென்று தெரியாது
அடர்ந்த என் குடிலுக்கு
பக்கவாட்டில்
தீ வைக்கத் தொடங்குகிறார்கள்

பரபரவென
பற்றி எரிகிறது
தீ

மிகத் தெளிவான வானில்
பறக்கத் தொடங்குகின்றன
வல்லூறுகள்

அங்கும் இங்கும்
நெளிய ஆரம்பிக்கின்றன
என்
பாம்புக் கூட்டங்கள்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: