3 மார்ச், 2014

காணொளி

அவ்வப்போது வருகிறாய்
கொல்லையை வெறித்தபடி
பின்வாசலில் அமருகிறாய்

தேநீர் உபசரிக்கும்
அம்மாவை
மெலிதான புன்னகையுடன்
நோக்குகிறாய்

தொழுவறை
சமையலறை
கழிவறையென
அரவமில்லாமல்
கடந்து செல்கிறாய்

எதிர்ப்படுமென்னை
மறந்தும்
ஏறிட்டு நோக்க
மறுக்கிறாய்

அதிகாலைத் தூக்கம்
கலைக்கும்
குருவிகளோடு குருவியாய்
பறந்தும் செல்கிறாய்

கூடத்தில் அமர்ந்து
வாசித்துக் கொண்டிருக்கும்
செய்தித்தாளில் விரிகிறது
எவரும் காணாத
ஒரு காணொளி.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: