அவர்கள் சந்தித்தபொழுது
நாம் எங்கிருந்தோமோ
அதே இடத்தில்தான்
இன்னும் இருக்கிறோம்
நடக்கும் வாய்ப்போ
நகரும் வாய்ப்போ
நமக்கு இல்லை
அவ்விடம் தவிர்த்து
எவ்விடம் சந்தித்தாலும்
அவ்விடத்திலிருந்தே
நம்மை நினைவு கூரும்
பாசி படிந்த அவர்களின்
நினைவுச் செல்களிலிருந்து
அழிப்பதற்காகவேனும்
நாம்
நகர்ந்து தொலைக்க வேண்டும்
அல்லது
நகர்த்த்த்தப் பட வேண்டும்.
--கார்த்திக் முருகன்
நாம் எங்கிருந்தோமோ
அதே இடத்தில்தான்
இன்னும் இருக்கிறோம்
நடக்கும் வாய்ப்போ
நகரும் வாய்ப்போ
நமக்கு இல்லை
அவ்விடம் தவிர்த்து
எவ்விடம் சந்தித்தாலும்
அவ்விடத்திலிருந்தே
நம்மை நினைவு கூரும்
பாசி படிந்த அவர்களின்
நினைவுச் செல்களிலிருந்து
அழிப்பதற்காகவேனும்
நாம்
நகர்ந்து தொலைக்க வேண்டும்
அல்லது
நகர்த்த்த்தப் பட வேண்டும்.
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக