1) கரை(த்)தல்
அவ்வளவு காதல்
அவ்வளவு கவிதைகளோடு
கரையக் காத்திருக்கிறேன்
உன்னுள்..
நீயென்னவோ
அவ்வளவு பயம்
அவ்வளவு பக்தியென்று
கரைத்துக் கொண்டிருக்கிறாய்
பிள்ளை'யார்'களை..
2) நம் வீடு
உன் வீட்டிலிருந்து
இரண்டு தெருக்கள் தான்
தள்ளியிருக்கிறது
என் வீடு என்கிறாய்..
நீண்ண்ண்டதொரு பெருமூச்சுடன்
என் வீட்டிலிருந்து
ஈராயிரம் தெருக்கள்
தள்ளியிருக்கிறது
உன் வீடு என்கிறேன்...
--கார்த்திக் முருகன்
அவ்வளவு காதல்
அவ்வளவு கவிதைகளோடு
கரையக் காத்திருக்கிறேன்
உன்னுள்..
நீயென்னவோ
அவ்வளவு பயம்
அவ்வளவு பக்தியென்று
கரைத்துக் கொண்டிருக்கிறாய்
பிள்ளை'யார்'களை..
2) நம் வீடு
உன் வீட்டிலிருந்து
இரண்டு தெருக்கள் தான்
தள்ளியிருக்கிறது
என் வீடு என்கிறாய்..
நீண்ண்ண்டதொரு பெருமூச்சுடன்
என் வீட்டிலிருந்து
ஈராயிரம் தெருக்கள்
தள்ளியிருக்கிறது
உன் வீடு என்கிறேன்...
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக