
1)
பத்மநாபன்
பக்கத்து ஊரில்
சரவணன் G
சவுதியில்
கார்த்திகேயனும்
கடல் தாண்டி..
இன்னும் வெவ்வேறு ஊர்களுக்கான
பயணச்சீட்டுகளுடன்
பரந்து விரிந்த மைதானங்களுடன்
காத்திருக்கின்றன
காரை பெயர்ந்த
கனவுகள் சுமந்த
ஒவ்வொரு பள்ளியும்..
2)
ஊரும் உறவும்
உருப்படாதவன்கள் என்றபோது
மாடும் மாடு சார்ந்த தொழிலும்
கவனிப்பதற்கு
தகுதிச் சான்றிதழ் தந்தது
ராமசாமியும் ராதாகிருஷ்ணன்
வாத்தியார் மட்டும்தான்.
3)
பேசியவர்கள்
பெயரெல்லாம் 'போர்டில்'
எழுதிக் கொண்டிருக்கிறாய்
நீ எழுத வேண்டும்
என்பதற்காகவே
பேசிக் கொண்டிருக்கிறேன்.
4)
சம்பளத்தாள் பார்க்கும்போதெல்லாம்
'க்ளோசப்பில்' வந்து தொலைக்கிறது
படிக்கவே படிக்காத
பிடிக்கவே பிடிக்காத
கணக்கு வாத்தியார்
முகம்.
--தொடரும்
--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக