13 செப்டம்பர், 2013

மழலை


அப்பா என்பதற்கு
'அபா' என்கிறாய்

அம்மா என்பதற்கு
'அமா' என்கிறாய்

பிடி என்பதற்கு
'பீபீ' என்கிறாய்

நீ இடாதவற்றை
நான் இட்டு நிரப்பியதில்
தெறித்துச் சிதறுகிறதென்
மணிப்பிரவாளம்.

--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: