19 ஆகஸ்ட், 2009

சமர்ப்பணம்...


அப்பா....

அப்பா என்றொரு வார்த்தை
என், அகராதியிலிருந்து மட்டும்
அவசரம் அவசரமாய்
அழிந்து போனதென்ன?

சப்தமிட்டுச் சிரித்த நீங்கள்..
ஒரு சப்தமேயில்லாமல்
மரச் சட்டத்திற்குள்
அடை பட்டுப் போனதென்ன?

அப்பா!
நீங்கள் கற்றுத் தந்த
தமிழ்ச் சொற்கள் மட்டுமே
துணையாய் நின்று
எனக்காய் உங்களுக்காய்
அழுது கொண்டிருக்கின்றன.

உலகத்தின் வரையறை
சரிவர எனக்குத் தெரியாதப்பா..
எனக்குத் தெரிந்த உலக வரையறை எல்லாம்
'அப்பா' மட்டுந்தான்.
--கார்த்திக் முருகன்.

கருத்துகள் இல்லை: