இருக்கின்றன...
திரைச்சீலை வேண்டாமென்று
கழற்றியே வைத்துவிட்டேன்.
வெறுமை சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டிருக்கின்றது
எனக்கான நாற்காலியில்..
இன்னும் வந்து சேரவில்லை
மழைக் கூட்டம்...
படபடப்புடன்
சன்னலருகே
காத்திருக்கின்றன
வெற்றுத்தாள்கள்.;
ஆறிப் போய்க்கொண்டிருக்கின்றது
அம்மா தயாரித்த
பலகாரம்.
-- கார்த்திக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக