கொஞ்சம் அதிகமாகவே சொல்ல வேண்டும் இந்த ஹைக்கூ அனுபவங்களைப் பற்றி. ஒரு கட்டத்திற்கு மேல் , ஒரு வித சலிப்புடன் கவிதைப் புத்தகங்களை வாசிப்பிற்கு உட்படுத்தியபோது, இதுவும் இருக்கின்றது என்று எடுத்துக்காட்டிய கூடல்.காம் குழுவிற்கு எனது நன்றியை எப்போதும் உரித்தாக்குகிறேன்.
அது, இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு. மதுரையில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த இளங்கலை பயின்ற மாணவர்களால் நடத்தப் பெற்ற ஒரு இலக்கியக் பத்திரிக்கை 'சாளரம்'. கூடல் அதற்கு நிதியுதவி வழங்கியது. ஏராளமான புத்தகங்களை வாசிக்கத் தந்தது.
அப்போதுதான் விரிசல் நிலத்தில் துளியாய் வந்திறங்கியது ஹைகூக்கள். ஒவ்வோர் அடிக்கும் உண்டான பின்புலம் அறிந்த பின், சென் கவிதைகள் பற்றித் திரும்பியது பார்வை. ஏதோ ஒரு போதை எனைப் பற்றிக் கொண்டது. முதல் ஏழு நாட்கள் நான் நடந்து செல்லும் வீதியெங்கும் ஹைகூக்களே நிரம்பி இருப்பதாய்ப் பட்டது.
கே.கே நகரில் இருந்து அண்ணா நகர் செல்லும் சாலை எங்கும் ஹைகூக்கள் இறைந்து கிடந்ததன. சுந்தரம் பூங்கா ஏதோ ஓர் சென் தவச் சாலையை மாறிப் போனது. வற்றிப் போன வண்டியூர்க் கண்மாயில் ஓடும் படகுகள் என்னவோ, என்னையும் சென் குருமார்களையும் சுமந்து செல்வதாகவே தோன்றியது.
என்னனென்னவோ எழுதித் தொலைத்தேன். பாதிக்கு மேல் எங்கள் வீட்டு குப்பைத் தொட்டிக்கு தின்னக் கொடுத்ததுதான் மிச்சம். எஞ்சியவைகள் உங்கள் பார்வைக்கு. இன்னும் வரும் இது பற்றி...
முகங்கள்
சுயத்தைப் புதைத்த
இரவல் முகங்கள்
விரிசல் விழுந்த கண்ணாடி.
காதல்
நீ
திருப்பிக் கேட்கும் காதல்
ஏகலைவன் கட்டைவிரல்.
சனநாயகம்
ஐந்தறிவுக்கு கழுநீர்த்தொட்டி
ஆறறிவுக்கு கஞ்சித்தொட்டி
வாழ்க சனநாயகம்.
சந்தோஷம்
எப்போது கால்நனைத்தாய்?
சந்தோசத்தில்
துள்ளிக் குதிக்கும் மீன்கள்.
-- கார்த்திக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

4 கருத்துகள்:
அருமை கார்த்திக்!
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரா
--கார்த்திக்
ஹைக்கூ எழுதி இருக்கேன் படிடான்னு நீ என்னைய கொடுமை படுத்துனத மறக்க முடியாதுடா
நண்பா, விதையைப் போடுறதுக்கு முன்னாடி, நிலத்தை உழுதுதாண்டா ஆகணும். என்ன பண்றது நீ மட்டுந்தான் சிக்குன...
--கார்த்திக்
கருத்துரையிடுக