19 ஆகஸ்ட், 2009

இரவு

இரவு

அறுந்து அறுந்து வரும்
வியர்த்த கனவுகளினுடான
மதிய வேளைகள்.

எப்படி முயற்சித்தும்
ஒருக்களித்துச் சாய்ந்தும்
தவிர்க்க முடியவில்லை
வெப்பக் காற்றையும்
உன் மீதான கனவுகளையும்.

ஈனஸ்வரத்தில் சமரசம் செய்யும்
மின்விசிறிகளை நம்பி தொடர விரும்பவில்லை
மேலும் கனவுகளை.

காத்திரு.
ஏகாந்தத்தில்.. புதைக்கவும்.. போர்த்திக் கொள்ளவும்
குறி முட்களின் மீதேறி
நகர்ந்து கொண்டிருக்கின்றது
இரவு.
--கார்த்திக்

கருத்துகள் இல்லை: