பற்றி எரியும்
விமர்சனத் தீயில்
நொறுங்கி சப்திக்கின்றன
என் எலும்புகள்.
கிழிந்த தலையணையும்
கோரைப் பாயும்
எத்தனை காலம் சொல்லிக் கொண்டிருக்கும்
என் தகனத்தை?
அடுத்த ஊர்வலத்தின்
ஆர்ப்பாட்டம்
கேட்கத் துவங்கி விட்டது.
நீங்களும்
உங்கள் சுடுகாடும்..
--கார்த்திக்
24 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக