28 ஆகஸ்ட், 2009

கோ கோ

சுற்றுகளில் ஓடி
பழக்கப் பட்டவர்கள் நீங்கள்.

என்னைத் தட்டி எழுப்பி விட்டு
எதிரும் புதிருமாய்
அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஒருசில சுற்றுகள் முடிந்த பின்னும்
உங்களைப் பிடித்துவிடும் திராணி
வாய்த்து விடவில்லை எனக்கு.

இது என் முறை.

மிகக் கவனமாய்
என் காதுகளைப் பின் நிறுத்தி
நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும்
தட்டியெழுப்ப வியலாத இடத்தில்
இருத்திக் குந்தும் வரை.

--கார்த்திக் முருகன்

6 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

Nice one Karthi,

-priyamudan
sEral

Karthik சொன்னது…

Thanks, Sera.

--Karthik

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

//நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும்
தட்டியெழுப்ப வியலாத இடத்தில்
இருத்திக் குந்தும் வரை//

அருமை..

Karthik Murugan சொன்னது…

மிக்க நன்றி, சுபஸ்ரீ இராகவன்.

ஆயில்யன் சொன்னது…

//மிகக் கவனமாய்
என் காதுகளைப் பின் நிறுத்தி
நீங்கள் தொட்டு விடாத தூரத்தில்
தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறேன்//

சட்டுன்னு வந்து மனசுல ஒட்டிக்கிச்சு :)

கவிதை அருமைங்க!

Karthik Murugan சொன்னது…

மிக்க நன்றி ,ஆயில்யன்.