24 ஆகஸ்ட், 2009

ப்ரியம்

மிகப் பத்திரமாய்
மிகக் கவனமாய்
ஒப்படைக்கப்பட்ட என் ப்ரியத்தை
குற்றுயிரும் குலையுயிருமாய்
வழியில் கண்டெடுத்தேன்...


ஒருவருக்கும் தெரியாமல்
வளர்த்து வருகிறேன் என்றாலும்
மீண்டும் உனைப் பார்த்து விடாத படிக்கு
என்னோடே கூட்டிச் செல்கின்றேன் என் ப்ரியத்தை...


எப்படியாகிலும்
எனக்கு முழுதாய்த் தேவை
என்னுடைய ப்ரியம்.
--கார்த்திக்

கருத்துகள் இல்லை: