நிசப்தம் எரித்துச்
சந்தோஷம் பூசியது
அவன் வீசியெறிந்த
முகக் கண்ணாடி.
"ங்கா" வென
சுட்டு விரல் காட்டி
உயில் வாசித்தான்
உடைந்த கண்ணாடிக்கு..
பெயரனின் குறும்பு கண்டு
அம்மாவுக்கு சந்தோஷம்.
அம்மாவின் பூரிப்பு கண்டு
அக்காவுக்கும் அப்படித்தான்.
இது போதாது!
இன்னும் சில கண்ணாடிகள்
புதிதாய் வாங்கி வர வேண்டும்.
--கார்த்திக்
25 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

2 கருத்துகள்:
இதுதான் தாய்மாமன் தெனாவெட்டு!
:)
கருத்துரையிடுக