வேர்கள் பற்றி சரியாகத் தெரியாதெனக்கு
ஆணி.. சல்லி.. எதுவாய் வேண்டுமானால்
இருந்து விட்டுப் போகட்டும்..
மிகச் சாமர்த்தியமாய்
நீ வெட்டி எறிந்தனவெல்லாம்
தலை காட்டுகின்றன
இந்த அடை மழையில்...
கூடடைய விரும்பாததொரு கரும் பறவை, இரை தேடிச் செல்லும் வழியெங்கும், ஓற்றையடிப் பாதைகளை பிரசவித்துச் செல்கிறது... --கார்த்திக் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக