25 ஆகஸ்ட், 2009

உழவு..

உழவை முடித்து வைத்தாய்
விதைப்பு எப்பொழுது?

துளைகளிட்டுக் கொண்டு
மேலே வரும் நாற்றுக்காய்
பொழியக் காத்திருக்கும்
மேகக் கூட்டம்.

விதைகளை ஒளித்து வைத்து
விளையாடாதே.

பருவம் தவறினால்
பாழ் பட்டுப் போகும்
நிலமும் விதையும்..

--கார்த்திக்

கருத்துகள் இல்லை: