16 அக்டோபர், 2013

ஈழம்-1

விசாலமாய்
ஒரு வீடு

தொடக்கத்தில்
மல்லிக் கொடி

தோட்டத்தில்
வாழை மரம்

தலைசாய்க்க
தனியறை

எதுவும் வேண்டாம்

இப்பொழுதைக்கு முக்கியம்
மூன்று வேளை
சோறு.


--கார்த்திக் முருகன்

கருத்துகள் இல்லை: