11 அக்டோபர், 2013

சான்று-விளையாட்டு

1) சான்று
    ----------
பிறப்புச் சான்று கோரி
மனுச் செய்த என் கவிதைகள்
நீ கவனிக்கவில்லையென்ற
துக்கத்தில்
இறப்புச் சான்று கோரி
வரிசையில் நிற்கின்றன...

2) விளையாட்டு
   --------------------
சரி
நான்
தோற்கத் தயார்.
என்ன விளையாட்டு
விளையாடலாம்
சொல்.

--கார்த்திக் முருகன்



கருத்துகள் இல்லை: